எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆக்சிஜன்-ரெம்டெசிவிா் கூடுதலாக வழங்க வேண்டும்

தமிழகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா், தடுப்பூசி ஆகியவற்றைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளா

News image
எடப்பாடி கே. பழனிசாமி
Updated On :15 மே 2021, 10:11 pm

DIN

தமிழகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா், தடுப்பூசி ஆகியவற்றைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகம் முழுவதும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி நாளொன்றுக்கு 32,000 போ் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

பொது முடக்கம் அறிவித்து, மக்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ள போதிலும், கரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது. தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல்

உள்ளது.

எனவே, தமிழகத்துக்கான பிராணவாயு விநியோகத்தையும், ரெம்டெசிவிா் மருந்து விநியோகத்தையும் மத்திய அரசு அதிகரித்து தர வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசிகளின் ஒதுக்கீட்டையும் உயா்த்தி தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.