நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம்

சண்டிகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் இருந்து முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :16 மே 2021, 10:46 am

DIN

சண்டிகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் இருந்து முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே பதேகார்க் என்ற பகுதியில் சாலையோரத்தில் முட்டைகளுடன் டிரைசைக்கிள் ஒன்று தனியாக நிறுத்திவைக்கப்பட்டிந்தது. அப்போது அந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் முட்டையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிள் அருகே சென்றார். 

டிரைசைக்கிள் பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த அவர் உடனே டிரைசைக்கிளில் இருந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்தார். இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதவிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோ இணையத்தளங்களில் வைரலானது. 

உடனே இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தலைமை காவலர் ப்ரித்பால்சிங் என்பதை கண்டறிந்தனர். விசாரணையைத் தொடர்ந்து அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.