கரையைக் கடந்த ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் மொத்தம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக குஜராத்தில் ஏற்பட்ட சேதங்களால் 21 மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் மட்டும் இதுவரை 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் அதிதீவிரப் புயலாக குஜராத்தில் திங்கள்கிழமை (மே 17) இரவு கரையைக் கடந்தது.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக மாறியது. புயல் காரணமாக கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழையும் பலத்த காற்றும் வீசியது.
இதனால் கடற்கரையோர பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான கோவாவிலும் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவாவில் சேதமடைந்துள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை சீர் செய்யும் பணிகளிலும் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.
டாமன்-டையு பகுதியில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மீட்புப் படை உதவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


