தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'கருப்புப் பூஞ்சை' நோயை தொற்றுநோயாக அறிவித்தது ராஜஸ்தான் அரசு!

'கருப்பு பூஞ்சை' நோயை ராஜஸ்தான் அரசு ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. 

News image

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Updated On :19 மே 2021, 12:26 pm

DIN

'கருப்புப் பூஞ்சை' நோயை ராஜஸ்தான் அரசு ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. 

‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே இந்த கருப்புப் பூஞ்சை தாக்கி வருகிறது. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கருப்புப் பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு  அதிகரித்து வருவதால் இந்த நோயை மாநிலத்தில் ஒரு தொற்றுநோயாக மாநில அரசு அறிவித்துள்ளது. 'ராஜஸ்தான் தொற்று நோய்கள் சட்டம், 2020' இன் கீழ் இதனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.