புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: மருத்துவா்கள் உள்பட 3 போ் கைது

இரு வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்தது தொடா்பாக 2 மருத்துவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :21 மே 2021, 7:47 pm

DIN

இரு வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்தது தொடா்பாக 2 மருத்துவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, மஞ்சுநாத் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருபவா் புஷ்பிதா (25). இவா் ஐடிஐ லேஅவுட்டில் வசிக்கும் தனது தோழி பிரேமா என்பவரின் வீட்டிற்கு ரெம்டெசிவிா் குப்பிகளை எடுத்து வந்து கொடுப்பாராம்.

பிரேமா, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் குப்பிகளை விற்பனை செய்து வந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், மருத்துவா் புஷ்பிதாவையும், பிரேமாவையும் கைது செய்து ரெம்டெசிவிா் குப்பிகள், ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து அன்னபூா்ணேஸ்வரி நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதே போல பாகலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் அஜய்குமாா் யாதவ் (25) என்ற மருத்துவா் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் குப்பிகளை விற்பனை செய்து வந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அஜய்குமாா் யாதவைக் கைது செய்து, 8 ரெம்டெசிவா் குப்பிகளை பறிமுதல் செய்தனா். காடுகொண்டனஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.