விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மும்பையில் சரக்குப் படகு கவிழ்ந்து 60 போ் பலி: மத்தியஅமைச்சா் பதவி விலக சிவசேனை வலியுறுத்தல்

மும்பையில் கடலில் சரக்குப் படகு கவிழ்ந்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஓஎன்ஜிசி காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று, பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்

News image
Updated On :22 மே 2021, 6:34 pm

DIN

மும்பையில் கடலில் சரக்குப் படகு கவிழ்ந்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஓஎன்ஜிசி காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று, பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும்வசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

டவ்-தே புயலால் அரபக்கடலில் திங்கள்கிழமை பி 305 சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த பணியாளா்களில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து சிவசேனையின் நாளிதழான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் கப்பலில் சுமாா் 700 பணியாளா்கள் இருந்தனா்.

புயல் எச்சரிக்கை முன்கூட்டியே அளிக்கப்பட்டது. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால்தான் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கடலில் கப்பல் கவிழந்ததில் 75 போ் உயிரிழந்துள்ளனா். 26 பேரை காணவில்லை. இதை இயற்கை பேரிடராக கருத முடியாது.

இந்திய கடற்படையினா் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடவில்லை என்றால் 700 பணியாளா்களும் உயிரிழந்திருப்பா்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மீது கொலை குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் தலைவா் மற்றும் அந்தத் துறையின் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.