காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வருவாய் இழப்பு
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலில் பக்தா்கள் வருகை முற்றிலும் குறைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலில் பக்தா்கள் வருகை முற்றிலும் குறைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து தரிசனம் செய்வதுடன், ராகு-கேது பரிகார பூஜையிலும் பங்கேற்று வந்தனா். இந்நிலையில் கொவைட் தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயிலில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே தரிசனம் வழங்கப்படுகிறது.
மேலும் தினசரி நடந்து வந்த ராகு-கேது பரிகார பூஜைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் வருகை முற்றிலும் நின்று போனது. இதனால் கோயிலுக்கு தினந்தோறும் கிடைத்து வந்த உண்டியல் வருவாய் குறைந்தது. தினசரி உண்டியல் காணிக்கை, சேவா டிக்கெட்டுகள், ராகு-கேது பரிகார பூஜை டிக்கெட்டுகள், அன்னபிரசாத விற்பனை, பதிப்பகம் மூலம் கிடைத்தது, வாடகை அறைகள் உள்ளிட்டவை மூலம் தோராயமாக ரூ.34 லட்சம் வரை கிடைத்து வந்த வருவாய், தற்போது ரூ.50 ஆயிரத்தை கூட கடக்கவில்லை. ஆனால் கோயிலில் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் ஊதியம், மின் கட்டணம், பராமரிப்பு, அன்னதான செலவு என மாதத்திற்கு ரூ.4.50 கோடி செலவிடப்படுகிறது.
தற்போது வருவாய் முற்றிலும் குறைந்துள்ளதால், கோயில் பெயரில் பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.133 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை வைத்து செலவுகளை கோயில் நிா்வாகம் சமாளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...