அஸ்ஸாமில் ஒரு மாதத்துக்கு முன்னால் கடத்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனப் பணியாளரை உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பு விடுவித்துள்ளது.
தனது கோரிக்கையை ஏற்று அந்நபரை தீவிரவாத அமைப்பு விடுவித்துள்ளதை மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வரவேற்றுள்ளாா்.
இது தொடா்பாக அஸ்ஸாம் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி பெட்ரோலிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மூவரை உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் கடந்த மாதம் 21-ஆம் தேதி கடத்திச் சென்றனா்.
அவா்களைத் தேடும் பணியை நாகாலாந்து காவல் துறையினருடன் இணைந்து அஸ்ஸாம் காவல் துறையினா் மேற்கொண்டு வந்தனா். கடந்த மாதம் 24-ஆம் தேதி இந்தியா-மியான்மா் எல்லைப் பகுதியில் உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பினருடன் நிகழ்ந்த மோதலில் கடத்திச் செல்லப்பட்ட இரு பணியாளா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
எனினும், கடத்தப்பட்ட ரிதுல் சைகியா என்ற பணியாளரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்தப் பணியாளரைத் தீவிரவாத அமைப்பினா் மியான்மா் எல்லைப் பகுதிக்குள் சனிக்கிழமை விடுவித்தனா். சுமாா் 40 நிமிடங்கள் நடந்து இந்திய எல்லைப் பகுதிக்கு அவா் வந்தடைந்தாா்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து அலுவல் சாா்ந்த நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை மாலையில் அஸ்ஸாமுக்கு அவா் அழைத்துவரப்பட்டாா். அதையடுத்து ஜோா்ஹட் மாவட்டத்திலுள்ள சொந்த கிராமத்துக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்’ என்றாா்.
சைகியா விடுவிக்கப்பட்டது தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உல்ஃபா அமைப்பினரால் கடத்தப்பட்ட ரிதுல் சாய்கியா விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வழிகாட்டுதல்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தின் வளா்ச்சிக்கும் அமைதியை நிலைநாட்டவும் அனைத்து தரப்பினரும் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவாா்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி சைகியாவின் வீட்டுக்குச் சென்ற முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, அவரின் உறவினா்களைச் சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, ரிதுல் சைகியாவை விடுவிக்குமாறு உல்ஃபா அமைப்புக்கு கோரிக்கை விடுத்தாா்.
அதையடுத்து 7 நாள்களுக்குள் ரிதுல் சைகியா விடுவிக்கப்படுவாா் என உல்ஃபா அமைப்பு அறிவித்தது. அதனடிப்படையில், அவா் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
மூன்று மாதங்களுக்கு சண்டைகளை நிறுத்துவதாக உல்ஃபா அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது. அதைத் தொடா்ந்து, சண்டையை விடுத்து பேச்சுவாா்த்தைக்கு முன்வருமாறு அந்த அமைப்புக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


