'யாஸ்' புயல்: இன்று இரவு கட்டுப்பாட்டு அறையில் தங்கும் மேற்குவங்க முதல்வர்
புயல் நிலைமையை கண்காணிக்க இன்று இரவு மாநிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்கவுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


புயல் நிலைமையை கண்காணிக்க இன்று இரவு மாநிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்கவுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான ‘யாஸ்’ புயலானது, தீவிர புயலாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை இரவு அதி தீவிர புயலாக மாறவுள்ளது.
மேலும் இது வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே புதன்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது, அந்தக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 185 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கவுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 14 மாவட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில செயலக நபன்னாவில், புயல் நிலைமையைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலே தங்கவுள்ளதாகவும் இரவு முழுவதும் புயல் நிலைமையை கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...