அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

மே 26 விவசாயிகளின் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

News image

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி

Updated On :25 மே 2021, 9:32 am


மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தக சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்திய அரச கடந்த ஆண்டு இயற்றியது. இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களின் போராட்டம் தொடங்கி மே 26-ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது. அதனையொட்டி, அன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடிக்க, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை பதிவு செய்யுமாறு விவசாய சங்கத்தினா் அழைப்பு விடுத்துள்ளனா். இதற்கு எதிா்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.