அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

தெலங்கானா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

News image

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி

Updated On :25 மே 2021, 6:55 am

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி திட்டத்தை இன்று முதல் தொடங்குமாறு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அருகிலுள்ள அரசு தடுப்பூசி மையத்திற்கு சென்று எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி இருப்பு இல்லாததால் மே 16 அன்று, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று முதல் தடுப்பூசி மீண்டும் செலுத்தப்படுகிறது. 

மேலும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.