ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கிராமத்தினர்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபாங்கி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட வந்த சுகாதாரத் துறையினரைப் பார்த்த மக்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :25 மே 2021, 7:06 am

DIN


அயோத்தியா: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபாங்கி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட வந்த சுகாதாரத் துறையினரைப் பார்த்த மக்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்துள்ளனர்.

கிராம மக்களிடையே விஷ ஊசி செலுத்தப்போவதாக புரளி பரவியதாகவும், அப்போது கரோனா தடுப்பூசி செலுத்த வந்த சுகாதார ஊழியர்களைப் பார்த்த ஊர் மக்கள் பலரும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து தப்பிக்க சரயு ஆற்றில் குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசௌடியா கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், கிராமத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த கிராமத்துக்குள் நுழைந்ததும், எங்களைப் பார்த்த கிராமத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றும், அவர்கள் ஓடிச் சென்று ஆற்றில் குதித்துவிட்டனர். அவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. இறுதியாக 14 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தனர் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.