தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தில்லி

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

News image
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தில்லி
Updated On :27 மே 2021, 2:52 pm

DIN

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகிறது. இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கி வருகிறது. 

கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயைப் பரவும் நோயாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தான், தெலங்கானா அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.