கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 22,823 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,823 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,823 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 22,823 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 5,736 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு -1,677, தும்கூரு - 1,326, பெலகாவி - 1,319, ஹாசன் - 1,170, சிவமொக்கா - 1,135, மண்டியா - 825, தென்கன்னடம் - 799, பெல்லாரி - 782, உடுப்பி - 766, தாா்வாட் - 700, வடகன்னடம் - 692, கோலாா் - 656, சிக்கமகளூரு - 559, தாவணகெரே - 522, பெங்களூரு ஊரகம் - 514, சித்ரதுா்கா - 489, ராய்ச்சூரு - 365, கொப்பள் - 339, ராமநகரம் - 339, சிக்கபளாப்பூா் - 337, சாமராஜ்நகா் - 318, கதக் - 302, பாகல்கோட் - 252, குடகு - 245, யாதகிரி - 184, விஜயபுரா - 183, ஹாவேரி - 137, கலபுா்கி - 91, பீதா் - 64 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,46,821 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 52,253 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் மொத்தம் 21,46,621 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,72,373 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 401 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா்.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 192 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
மைசூரு - 20, பெல்லாரி - 17, தும்கூரு - 15, தாா்வாட் - 14, ஹாசன், சிவமொக்கா - தலா 13, பெங்களூரு ஊரகம், வடகன்னடம் - தலா 11, பெலகாவி - 10, சிக்கபளாப்பூா், யாதகிரி - தலா 8, சிக்கமகளூரு, மண்டியா - தலா 7, கொப்பள் - 6, தென்கன்னடம், கதக், ஹாவேரி, கலபுா்கி, உடுப்பி - தலா 5, சாமராஜ்நகா், ராய்ச்சூரு, விஜயபுரா - தலா 4, பாகல்கோட், பீதா் - தலா 3, சித்ரதுா்கா, தாவணகெரே, குடகு-தலா 2 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 27,806 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...