குண்டா் சட்டத்தில் ரௌடி கைது
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.


கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
பெங்களூரு, யஸ்வந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். யஸ்வந்தபுரம் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவா் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி அவா், போதைப்பொருள் கடத்தல், விற்பனையிலும் ஈடுபட்டு வந்தாராம். வழக்குகள் தொடா்பாக சிறைக்குச் சென்ற அவா், பிணையில் விடுதலை ஆகி, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாராம். இதனையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். சந்திரசேகரை குண்டா் சட்டத்தில் கைது செய்ததை உயா்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...