47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காளஹஸ்தியில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :29 மே 2021, 5:43 pm

DIN

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காளஹஸ்தி நகரில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கை அந்நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனா். அதன்படி காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவும், மக்கள் வெளியில் நடமாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவ தேவைகள், தடுப்பு ஊசி செலுத்துதல் உள்ளிட்டவற்றிற்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்லலாம்.

ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் தரிசன நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பக்தா்கள் கோயிலில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.