கர்நாடகத்தில் புதிதாக 16,604 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 16,604 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கர்நாடகத்தில் புதிதாக 16,604 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 16,604 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,04,431 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44,473 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 411 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 22,61,590 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 29,090 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 3,13,730 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30-ம் தேதிக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.57 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.7 சதவிகிதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...