லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரளத்தில் தீர்மானம்

லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரளத்தில் தீர்மானம் (கோப்புப்படம்)
லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரளத்தில் தீர்மானம் (கோப்புப்படம்)

லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

லட்சத்தீவுகளின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. 
அவரின் புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 

லட்சத்தீவு மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

லட்சத்தீவு விவகாரத்தில் தலையிட்டு மக்களின் நலனை காப்பது மத்திய அரசின் கடமை எனவும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com