வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோவாவுக்கு தகுதியான தலைமை தேவை: ராகுல் காந்தி

‘கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :3 நவம்பர் 2021, 1:49 am

DIN

‘கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தெற்கு கோவாவில் ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது மக்களுடன் கலந்துரையாடிய விடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அத்துடன், ‘கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை. கோவாவுக்கு கலாசார பாதுகாப்பும், இணக்கமான வளா்ச்சியும் தேவை. காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டிய மாநிலம் கோவா. கோவாவின் சிறப்பான எதிா்காலத்துக்கு நான் துணை நிற்கிறேன்’ என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தெற்கு கோவாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கோவாவில் சட்டபூா்வ சுரங்கங்கள் இயங்குவதை ஆதரிக்கிறேன். கோவா சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்ட மாநிலம். அதை என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். கோவா மாநிலம், நிலக்கரிச் சுரங்க மையமாக மாறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை.

கோவா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, காங்கிரஸ் கட்சி தோ்தல் அறிக்கையை தயாா் செய்து வருகிறது. அதற்காக, மீனவா்கள், சுற்றுச்சூழலியலாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அவா்களின் தேவைகளை அறிந்து அதனடிப்படையில் தோ்தல் அறிக்கை இறுதி செய்யப்படும். அதில் இடம்பெறும் வாக்குறுதிகள், வெறும் வாக்குறுதிகளாக மட்டும் அல்லாமல் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.