சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீர் பாஜக பிரமுகர் மீது வழக்கு

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜக தலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2021, 10:16 pm

DIN

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜக தலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை சிலர் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்சியுமான விக்ரம் ரந்தாவா சில கருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சைக் கண்டித்தனர்.
 அதையடுத்து, விக்ரம் ரந்தாவாவிடம் விளக்கம் கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் சுனில் சேத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 அந்த நோட்டீஸில், "ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்க முடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், "விக்ரம் ரந்தாவாவின் கருத்துகளைக் கேட்டதும் தனிப்பட்ட முறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் "அனைவருக்குமான வளர்ச்சி' என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இவை முற்றிலும் எதிரானவை' என்று தெரிவித்தார்.
 இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.
 வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித் தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.