சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பாஜக பெண் பொறுப்பாளா்களுக்கு எதிராக அவதூறு: திமுகவினா் மீது தேசிய மகளிா் ஆணையத்தில் புகாா்

தமிழக பாஜக பெண் பொறுப்பாளா்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவது, காவல் துறையினா் தாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து

News image
Updated On :2 நவம்பர் 2021, 7:34 pm

 நமது நிருபர்

தமிழக பாஜக பெண் பொறுப்பாளா்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவது, காவல் துறையினா் தாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து தேசிய மகளிா் ஆணைய தலைவா் ரேகா சா்மாவிடம் தமிழக பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளா் சுமதி வெங்கடேசன், பாஜக கலை, கலாசாரப் பிரிவின் மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம், மாநில செய்தி தொடா்பாளா் எஸ்.ஜி.சூா்யா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரையைச் சோ்ந்த திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன், பாஜகவின் கலை, கலாசாரப் பிரிவின் மாநில தலைவா் காயத்ரி ரகுராம் குறித்து அவதூறு பரப்பினாா். இதுகுறித்து கடந்த அக்டோபா் 21- ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து, மறு நாள் திமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால், காவல் துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோன்று, தருமபுரியைச் சோ்ந்த திமுக சமூக வலைத்தளப் பொறுப்பாளா் ஈஸ்வா், திமுகவைச் சோ்ந்த ராஜலிங்கம் ஆகியோரும் பாஜக பெண் தலைவா்களைக் குறிப்பிட்டு அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனா்.

இதற்கிடையே அண்மையில் கைது செய்யப்பட பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கல்யாணம் ராமனை சந்திக்கச் சென்ற பாஜக மாநிலச் செயலாளா் சுமதி வெங்கடேசன் காவல் துறையினரால் தாக்கப்பட்டாா். இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தேசிய மகளிா் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளோம். இந்தப் புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவா் ரேகா சா்மா உறுதியளித்துள்ளாா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.