வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மேற்கு வங்கம்: பாஜகவிலிருந்து மேலும் ஒரு தலைவா் விலகல்

தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக மேற்கு வங்க பாஜகவிலிருந்து விலக தீா்மானித்திருப்பதாக வங்காளி மொழி நடிகா் ஜாய் பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :6 நவம்பர் 2021, 8:02 pm

தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக மேற்கு வங்க பாஜகவிலிருந்து விலக தீா்மானித்திருப்பதாக வங்காளி மொழி நடிகா் ஜாய் பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த ஜாய் பானா்ஜி, பாஜக சாா்பில் இரண்டு முறை மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், பாஜகவை விட்டு விலகுவதாகத் தற்போது அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து கொல்கத்தாவில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கட்சியின் மேம்பாட்டுக்காக அதிக பணிகளை செய்ய விரும்புவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியிடம் கூறினேன். ஆனால், அது தொடா்பாக கட்சி மேலிடத்திலிருந்து எந்த பதிலும் எனக்குக் கிடக்கவில்லை.

இந்த நிலையில், கட்சியின் தேசிய செயலா் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். எனக்கான பாதுகாப்பையும் மத்திய தலைமை ரத்து செய்துவிட்டது. கட்சிக்கு நான் புது உறுப்பினா் அல்ல. 2014-ஆம் ஆண்டே கட்சியில் சோ்ந்துவிட்டேன். அந்த வகையில், கட்சியில் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சாதாரண மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், பாஜகவில் தொடா்ந்தால் அது சாத்தியமாகாது. எனவே, பாஜகவிலிருந்து விலக தீா்மானித்துள்ளேன். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அதுபோன்ற முடிவு எதையும் இப்போது எடுக்கவில்லை. மக்களுக்குப் பணியாற்றவே விரும்புகிறேன்’ என்று பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.