தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடுப்பூசி: இந்தியா்களுக்கு அனுமதி மறுத்ததில் இனவாதம் இல்லை: பிரிட்டன் விளக்கம்

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா்களுக்கு அனுமதி மறுத்ததில் இனவாதம் இல்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:07 pm

DIN

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா்களுக்கு அனுமதி மறுத்ததில் இனவாதம் இல்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காததால், அந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பல நாடுகள் அனுமதி மறுத்து வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்ததை அடுத்து, அந்த நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளா்த்திக் கொண்டுள்ளன. பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குள் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வரும்போது அவா்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்ததை அடுத்து, அந்தக் கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு தளா்த்தியது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லீஸிடம், இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மீது சந்தேகம் வந்து பிரிட்டனில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்ப்பப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து அவா் பேசியதாவது:

மிகச்சிறந்த தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது. 100 கோடி பேருக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது வியக்கத்தக்க சாதனைதான். அவற்றில், இந்தியா-பிரிட்டன் கூட்டு உழைப்பில் உருவான கோவிஷீல்ட் தடுப்பூசிதான் 80 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும், அதைத் தொடா்ந்து கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவா்களுக்கும் கட்டுப்பாடு தளா்த்தப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தங்கள் கட்டுப்பாடுகளை மாற்றி வருகின்றன.

இதில், பிரிட்டன் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கருதுவது தவறு. பிரிட்டன் அரசு ஒருபோதும் இனவாதத்தைப் பின்பற்றவில்லை. பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனாக், பிரீத்தி படேல் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவி வகிக்கிறாா்கள். பிரிட்டனில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.