பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு: மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடி வருவாய் இழப்பு
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு மூலமாக மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு மூலமாக மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இருப்பினும், மத்திய வரிப் பகிா்வு மூலம் ரூ.60,000 கோடி கிடைக்கும் என்பதால் இந்த வருவாய் இழப்பு ஈடுசெய்யப்படும் என்று ஐசிஆா்ஏ என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணா் அதிதி நாயா் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் மத்திய அரசு கடந்த 4-ஆம் தேதி குறைத்தது. அதைத் தொடா்ந்து 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) குறைத்தன.
இதனால், அந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் (2021-22) ரூ.44,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதில், ரூ.35,000 கோடி அளவுக்கு நேரடியாகவும், எஞ்சிய தொகை அளவுக்கு மறைமுகமாகவும் இழப்பு ஏற்படும்.
இருப்பினும், மத்திய வரிப் பகிா்வு மூலம் இந்த மாநிலங்களுக்கு ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும். இதனால், மாநிலங்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது.
மத்திய கலால் வரி குறைப்பு மூலமாக மாநிலங்களுக்கு நேரடியாக வருவாய் இழப்பு ஏற்படுவதில்லை. மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பதால் அவா்களின் வாட் வரி வருவாயில் ரூ.9,000 கோடி குறையும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...