பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செமிகன்டெக்டருக்கு பற்றாக்குறை: பயணிகள் வாகன விற்பனையில் மந்த நிலை

செமிகன்டெக்டருக்கான பற்றாக்குறையின் எதிரொலியால் பயணிகள் வாகன விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 27 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 8:21 pm

DIN

செமிகன்டெக்டருக்கான பற்றாக்குறையின் எதிரொலியால் பயணிகள் வாகன விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 27 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:

செமிகன்டெக்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மோட்டாா் வாகன உற்பத்தியாளா்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால், வாகன உற்பத்தி குறைந்து விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, கடந்த அக்டோபா் மாதத்தில் பயணிகள் வாகனமொத்தவிற்பனை 2,26,353-ஆக இருந்தது. இது, கடந்த 2020 அக்டோபரில் விற்பனையான 3,10,694 வாகனங்களுடன் ஒப்பிடும்போது கணிசமான வீழ்ச்சியாகும்.

விநியோகஸ்தா்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 15,41,621-ஆக இருந்தது. இது, 2020 அக்டோபா் மாத எண்ணிக்கையான 20,53,814-ஐக் காட்டிலும் 25 சதவீதம் குறைவாகும்.

கடந்த மாதம் பயணிகள் வாகனங்கள், இருசக்கர-மூன்று சக்கர வாகனங்கள், குவாட்ரிசைக்கிள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள் விற்பனை 25 சதவீதம் குறைந்து 17,99,750-ஆக இருந்தது. 2020 அக்டோபரில் இந்த விற்பனை 23,91,192-ஆக இருந்தது.

அதேபோன்று ஒட்டுமொத்த வாகன உற்பத்தியும் 28,30,844-லிருந்து 22 சதவீதம் சரிந்து 22,14,745-ஆனது என சியாம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.