/

மாநிலங்களவைக்கு செல்லும் கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கோவா மாநில முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ, செப்டம்பர் மாதம் திரிணமூலில் இணைந்தார்.

News image
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்
Updated On :13 நவம்பர் 2021, 9:19 am

DIN

கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லூயிசினோ ஃபெலேரோவை, மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள மாநிலங்களவை இடத்திற்காக அவர் போட்டியிடவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய லூயிசினோ ஃபெலேரோ, செப்டம்பர் மாதம் திரிணமூலில் இணைந்தார். 

மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள திரிணமூல், "நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு லூயிசினோ ஃபெலேரோவை பரிந்துரைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேசத்துக்குச் சேவையாற்றும் அவரது முயற்சிகள் நம் மக்களால் பரவலாகப் பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.