கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

News image

பிரதமர் மோடி (கோப்புப்படம்)

Updated On :17 நவம்பர் 2021, 7:01 am

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

82-வது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி கரோனாவைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றதுடன் 110 கோடியைக் கடந்த தடுப்பூசிகளைச் செலுத்தி புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம்.அசாதாரண இலக்குகளைக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். 

மேலும் என் சிந்தனை படி ‘ஒரு நாடு ஒரு சட்டமன்றம்’ என்பது பாராளுமன்றத்தில் தொழில்நுட்ப ஊக்கத்தை மட்டுமல்லாது தேசத்தை ஜனநாயக ரீதியாகவும் இணைக்கவல்லது என தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.