ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு: 10 மாதங்களில் 2-வது பாலியல் வழக்கு

ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏ-வுக்கு எதிராக 37 வயது பெண் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 1:03 pm

DIN


ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏ-வுக்கு எதிராக 37 வயது பெண் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோகுண்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் பீல். அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதயப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:

"கோகுண்டா எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அம்பாமாதா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."

தனக்கு வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் மூலம் உதய்ப்பூர் காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றம் செய்ததற்காக ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, கடந்த 10 மாதங்களில் கோகுண்டா எம்எல்ஏ பிரதாப் பீல் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது பாலியல் வழக்கு இது.

பிரதாப் பீல் மீதான இரண்டு பாலியல் குற்றங்களுக்கான விசாரணையையும் சிஐடி விசாரித்து வருவதாகக் காவல் துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.