முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
.jpg)
இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை
'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள்.
தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செய்தனர்.

இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மக்கள்.
இதையடுத்து நாடாளுமன்றத்திலும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி மரியாதை.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


