ஆந்திரத்தில் வெள்ளம்: 17 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

ஆந்திர மாநிலம் ராயலசீமாவின் 4 மாவட்டங்களாக சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்த்பூரில் கொட்டிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். 100 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு
ஆந்திரத்தில் வெள்ளம்: 17 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை
ஆந்திரத்தில் வெள்ளம்: 17 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை


திருப்பதி: ஆந்திர மாநிலம் ராயலசீமாவின் 4 மாவட்டங்களாக சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்த்பூரில் கொட்டிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். 100 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வியாழக்கிழமை மாலை கொட்டத் தொடங்கிய வெள்ளம் காரணமாக, திருப்பதி திருமலை கோயில் மற்றும் மலைப் பகுதிகளை காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்துகொண்டது.

இது தொடர்பாக விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வரலாற்றில் காணாத அளவுக்கு, திருமலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்துச் செல்வதையும் காண முடிந்தது.

இந்த வெள்ளத்தில் நான்கு மாவட்டங்களிலும் 17 பேர் பலியாகியிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கும் அபாயமிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுவினர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருந்துகள், ராமாபுரம் அருகே கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், 12 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளிலு சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டு வரும் திருமலை
திருமலையில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மலைப் பாதையில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

அதனால் முதல் ஒரு மணிநேரம் திருமலைக்குச் செல்லும் வாகனங்களும், அடுத்த ஒரு மணி நேரம் திருப்பதிக்குச் செல்லும் வாகனங்களும் முதல் மலைபாதையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் சற்று சிரமத்துக்கு உள்ளாயினா்.

மலைப் பாதையில் பக்தா்கள் யாரும் வாகனங்களிலிருந்து இறங்கி செல்ஃபி எடுக்க முயல வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மழை காரணமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்ய முடியாத பக்தா்கள்(வியாழன், வெள்ளி, சனி) வேறு ஒருநாளில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், திருமலையில் உள்ள பக்தா்கள் போக்குவரத்து சீராகும் வரை தங்கள் அறையிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உணவுகள் பக்தா்கள் கூடும் முக்கிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com