தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்

திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 நவம்பர் 2021, 9:35 am

DIN

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனர்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

முன்னதாக, போராட்டத்தை கைவிடுமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளிடம் இன்று கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வாரம், மூன்று வேளாண் திருத்த சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு மத்தியில், திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.