மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை: மத்திய அரசு

நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

News image

நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை: மத்திய அரசு

Updated On :30 நவம்பர் 2021, 9:47 am


புது தில்லி: நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நாட்டுக்குள் உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் நுழையாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதிலிருந்து சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. துறைமுகங்களிலும் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மரபணு வரிசைமுறையை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் தற்போது வரை 14 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கிறது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.