இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்

ஒரு திருமணமாகட்டும், புதுமனை குடிபுகும் நிகழ்வாகட்டும் எதில் பங்கேற்பதாக இருந்தாலும், அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் எழத்தான் செய்யும்.
இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
Published on
Updated on
1 min read

ஒரு திருமணமாகட்டும், புதுமனை குடிபுகும் நிகழ்வாகட்டும் எதில் பங்கேற்பதாக இருந்தாலும், அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் எழத்தான் செய்யும்.

அதற்காக ஒரு கடைக்குள் புகுந்த, அத்தனை பரிசுப் பொருள்களையும் ஒரு உருட்டு உருட்டி, பிறகு எதுவுமே பிடிக்கவில்லை என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வருவோரும் ஏராளம்.

நாம் வாங்கும் பொருள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமே என்ற கவலையோடுதான் இத்தனையையும் நாம் செய்கிறோம். ஆனால், நாம் வாங்கும் பொருளையே பலரும் வாங்க வாய்ப்பிருக்கும் நிலையில் ஒரு பக்கம் அதுவும் நெருடிக் கொண்டே இருக்கும்.

இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது. நீங்கள் கொடுக்கும் இந்த பரிசுப் பொருள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், வாயைப் பிளந்து பார்க்கும் அளவுக்கும் வேறு யாரும் கொடுக்காத பரிசாகவும் இருக்கும்.

அப்படி என்ன என்று கேட்கிறீர்களா.. இத்தனை நாள்களாக விலை உயர்வு பற்றி மட்டுமே பேசி வந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பரிசுக் கூப்பனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, என்ற  https://one4u.easyfuel.in/ இணையதளத்தில் சென்று, உங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்க எந்தத் தொகைக்கும் பரிசுக் கூப்ப பெற்றுக் கொள்ளலாம். அதனை அவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்த பரிசுக் கூப்பனைக் கொண்டு ஒருவர் நாட்டில் எங்கிருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் வங்கியிலும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். 

இத்தனையையும் நாம் ஆன்லைனிலேயே செய்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். பலரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வடையும் போது, கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்கிக் கொடுப்பார்கள். 

அதனைப் பார்த்து இந்தியன் ஆயில் நிறுவனம் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால், மாற்றி யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த யோசனை. நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் புதிய விதத்தில் பரிசளிக்க விரும்புவோருக்கு நிச்சயம் இது பயனளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com