ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்.பி.க்கள் இடைநீக்கம்: நாடாளுமன்ற வளாகத்தில் நாளைமுதல் தர்னா

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளைமுதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்னாவில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2021, 9:40 am

DIN

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளைமுதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்னாவில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கைய நாயுடுவுக்கு கடிதம் எழுதுவதுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து நாளைமுதல் தர்னாவில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸின் ஃபுலோ தேவி நேதம், சாயா வா்மா, ரிபுன் போரா, ரஜமணி படேல், சையது நசீா் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங் சிவசேனை எம்.பி.க்கள் பிரியங்கா சதுா்வேதி, அனில் தேசாய் ஆகியோரும், திரிணமூல் எம்.பி.க்கள் டோலா சென், சாந்தா சேத்ரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. இளமாரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.