மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பஞ்சாப் அரசியலில் தொடரும் திருப்பம்: முதல்வர் சரண்ஜீத் இன்று தில்லி பயணம்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று தில்லி சென்று கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

News image
முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி
Updated On :1 அக்டோபர் 2021, 5:34 am

DIN

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று தில்லி சென்று கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் மூத்த அதிகாரிகளின் பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தலைவர்களும் ராஜிநாமா செய்து வருகின்றனர்.

இதையடுத்து, முதல்வர் சரண்ஜீத்தின் அழைப்பை ஏற்று நேற்று மாலை சித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் இன்று தில்லி செல்லவுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.