இலங்கை இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி
இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போா்ப் பயிற்சிப் பள்ளியில் அக்டோபா் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.


இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போா்ப் பயிற்சிப் பள்ளியில் அக்டோபா் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரா்கள் இலங்கைக்கு சென்றனா்.
இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 120 வீரா்களை கொண்ட அணி இலங்கை ராணுவ பட்டாலியனுடன் இணைந்து போா்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இரு நாட்டு ராணுவங்கள் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதுடன், இருதரப்பு போா் ஆயத்த நிலையை வலுப்படுத்துவதோடு, தீவிரவாத மற்றும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த அணுகுமுறையை பரிமாறிக் கொள்வதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.
சா்வதேச பயங்கரவாத எதிா்ப்புச் சூழலில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே இந்த பயிற்சி
மேற்கொள்ளப்பட உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 7-வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி 2019-ல் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...