தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலி

திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள். 

News image

கோப்புப்படம்.

Updated On :2 அக்டோபர் 2021, 4:22 pm

DIN

திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள். 
உத்தரகண்ட் மாநிலம், திரிசூல் சிகரத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் சென்றபோது வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 வீரர்கள் மாயமானார்கள். இதையடுத்து அவர்களில் 4 வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.