தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை’: சிவசேனை

காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image

சஞ்சய் ரெளத்

Updated On :2 அக்டோபர் 2021, 3:54 pm

DIN

காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தனது பதவியை ராகுல்காந்தி ராஜிநாமா செய்ததற்குபின் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயல்பட்டாலும் செயல்படக்கூடிய வகையில் தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், “மிகப்பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது இயற்கையாகவே குழப்பத்தை ஏற்டுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  காங்கிரஸ் மட்டுமல்லாது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தலைவர் இல்லாமல் இருப்பது தொண்டர்களிடையே அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த சிவசேனை கட்சி எல்லைப் பிரச்னையில் உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசு ஆட்சியில் உள்ள முதல்வருடன்தான் ஆலோசிக்க வேண்டுமே தவிர அமரீந்தர் சிங்குடன் ஆலோசிப்பதாகத் தெரிவிக்கக் கூடாது என விமரிசித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.