பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கேரளத்தில் ஒரேநாளில் 12,297 பேருக்கு கரோனா 

கேரளத்தில் ஒரேநாளில் 12,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 அக்டோபர் 2021, 1:22 pm

DIN

கேரளத்தில் ஒரேநாளில் 12,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 88,914 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 12,297 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,904 பேரும், திரிச்சூரில் 1,552 பேரும், திருவனந்தபுரத்தில் 1,420 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,20,233 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 74 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25,377 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,37,043 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 16,333 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,57,199 ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 4,29,581 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.