உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.
இதையடுத்து, லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டதுடன் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதுதொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார்.
மேலும் முதல்வராகப் பதவியேற்ற பின்னர், முதல்முறையாக மரியாதை நிமித்தமாக கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

சங்ககிரியில் 1,600 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

