மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் நாயை அடித்து துன்புறுத்திக் கொன்ற இரு சுகாதாரப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்திலுள்ள கடேகான் பகுதியில் தங்களைப் பார்த்து குரைத்த நாயை சுகாதாரப் பணியாளர்கள் இருவர் கயிறு கட்டி அடித்து துன்புறித்தியுள்ளனர். இதில் நாய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இது தொடர்பாக விடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் இதனைக் கண்ட நகராட்சி நிர்வாகம் நாயைக் கொன்ற இருவரை அழைத்து எச்சரித்தது.
இதனிடையே பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரும் சுகாதாரப் பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிராக களமிறங்கினர்.
இதன்விளைவாக ஊழியர்கள் இருவரையும் நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து பேசிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் ஷர்மா, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தும் இந்தியாவின் திட்டம்; விவரிக்கும் புஜாரா!

தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

