ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தில்லியில் சிலிண்டர் வெடித்து தாய், 2 குழந்தைகள் பலி

தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர். 

News image
Updated On :6 அக்டோபர் 2021, 11:18 am

DIN

தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர். 

தலைநகர் தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயை முழுமையாக அணைக்க இரண்டு மணி நேரம் ஆனதாகவும் இரவு 11.15 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும்  தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், காயமடைந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் சுசிலா(35) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரின் மகள்கள் மேஹா(9) மான்சி(7), மகன் மோகன் (7) ஆகிய மூவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், மான்சி மற்றும் மோகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது மேஹா மட்டும் 40% காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.