மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஷாருக்கான் மகன் கைதுடன் பாஜகவிற்கு தொடர்பு: மகாராஷ்டிர அமைச்சர்

ஷாருக்கான் மகன் கைதுக்கும் பாஜகவிற்கும் தொடர்புள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். 

News image

நவாப் மாலிக் (கோப்புப் படம்)

Updated On :6 அக்டோபர் 2021, 1:44 pm

ஷாருக்கான் மகன் கைதுக்கும் பாஜகவிற்கும் தொடர்புள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். 
 
மோசடி செய்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாருக்கானை அடுத்த இலக்காக நிர்ணயித்துள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குற்றப்பிரிவு செய்தியாளர்கள் தெரிவித்ததாக கூறினார். 

மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுதொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகிய மூவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.