ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

லக்கிம்பூர் கேரி செல்வதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளித்து உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி
Updated On :6 அக்டோபர் 2021, 7:44 am

DIN

லக்கிம்பூர் கேரி செல்வதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளித்து உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இன்று லக்கிம்பூர் கேரிக்கு சென்று கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு இன்று காலை அனுமதி மறுத்தது.

ஆனால், லக்கிம்பூர் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறிய ராகுல், தில்லியிலிருந்து லக்னெளக்கு விமானத்தில் வந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இரு மாநில முதல்வர்கள் லக்கிம்பூர் செல்ல அனுமதி அளித்து உ.பி. அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.