விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹைதராபாத் விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூடானிலிருந்து கடத்திவரப்பட்ட 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image

ஹைதராபாத் விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

Updated On :7 அக்டோபர் 2021, 8:09 am

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூடானிலிருந்து கடத்திவரப்பட்ட 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-6) வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில்  1.2 கிலோ  தங்கத்தை மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை கைது செய்ததோடு அவரிடமிருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உள்ளாடையில் வைத்து 3 பேர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.