ஐபிஎல் 2021 போட்டியில் அதிவேகப் பந்துவீச்சு: சாதனை படைத்த 21 வயது இந்திய வீரர்

21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில்...
ஐபிஎல் 2021 போட்டியில் அதிவேகப் பந்துவீச்சு: சாதனை படைத்த 21 வயது இந்திய வீரர்

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக மணிக்கு 140, 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவார்கள். 

ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார் இந்தியப் பந்துவீச்சாளர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிவேகப் பந்துவீச்சு இதுதான்.  

இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலியின் கவனத்தையும் உம்ரான் மாலிக் ஈர்த்துள்ளார். 150 கி.மீ. வேகத்துக்குப் பந்துவீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கிருந்து அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டியது முக்கியம். அவருடைய திறமையை அதிகளவில் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார் உம்ரான் மாலிக். முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 151.03 கி.மீ வேகத்துக்குப் பந்துவீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இப்போது 2-வது ஆட்டத்தில் இன்னும் அதிகவேகமாகப் பந்துவீசி, ஐபிஎல் 2021 போட்டியில் வேகமாகப் பந்துவீசிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியின் அதிவேகப் பந்துவீச்சுப் பட்டியலில் முதல் 5 இடங்களில் 3 இடங்களை உம்ரான் மாலிக் பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2021: அதிவேகப் பந்துவீச்சு (மணிக்கு கி.மீ. வேகம்)

உம்ரான் மாலிக் - 152.95
பெர்குசன் - 152.75
பெர்குசன் - 152.74
உம்ரான் மாலிக் - 151.97
உம்ரான் மாலிக் - 151.77

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com