ஆர்சிபி தோல்வியால் நிம்மதியடைந்த சிஎஸ்கே அணி

இது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஆர்சிபி தோல்வியால் நிம்மதியடைந்த சிஎஸ்கே அணி

ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றால் மட்டும் போதாது, முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடித்தால் தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல இரு வாய்ப்புகள் கிடைக்கும். இல்லாவிட்டால் இறுதிச்சுற்றுக்குள் நுழையவே இரு வெற்றிகளைப் பெறவேண்டியிருக்கும்.

ராஜஸ்தான், தில்லி அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்ததால் முதல் இரு இடங்களுக்குள் சிஎஸ்கேவால் நுழைய முடியுமா எனக் கேள்வி எழுந்தது. எனினும் சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் அபாரமாக இருப்பதால் அதுவே கடைசிக்கட்டத்தில் காப்பாற்றும் எனக் கணிக்கப்பட்டது.

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோற்கடித்ததால் முதல் இரு இடங்களில் ஒன்று சிஎஸ்கேவுக்கு உறுதியாகியுள்ளது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஆர்சிபி அணியின் இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. இன்று பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்றாலும் நாளை தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி ஜெயித்தாலும் மாற்றம் வராது. சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் 0.739 என்றும் ஆர்சிபியின் நெட் ரன்ரேட் -0.159 என்றும் இருப்பதால் ஆர்சிபியால் சென்னையைத் தாண்டிச் செல்ல முடியாது. 

ஒருவேளை பஞ்சாப்புக்கு எதிராக சிஎஸ்கே 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால், அதே ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தில்லியை வென்றால் மட்டுமே ஆர்சிபியால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்து சிஎஸ்கேவைப் பின்னுக்குத் தள்ள முடியும். இது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com