மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விரைவில் கைது?

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 அக்டோபர் 2021, 4:45 pm


லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது நடவடிக்கை குறித்து காவல் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின்போது வன்முறை குறித்த ஆஷிஷ் மிஸ்ராவின் வாக்குமூலம் நம்பும்படியாக இல்லையென்பதால் மேற்கொண்டு பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்டக் காவல் துறையை சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, லக்கிம்பூர் வன்முறை வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையால் அமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆஜரானார் ஆஷிஸ் மிஸ்ரா. டிஐஜி உபேந்திர அகர்வால் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு சனிக்கிழமை மாலை வரை ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.