மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: நால்வா் கைது
மகாராஷ்டிரத்தில் ரயிலில் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


மகாராஷ்டிரத்தில் ரயிலில் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுதொடா்பாக மும்பை ரயில்வே காவல் ஆணையா் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘லக்னெளவிலிருந்து மும்பைக்கு வெள்ளிக்கிழமை இரவு விரைவு ரயில் சென்றது. மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் ரயில்வே மாவட்டத்தில் உள்ள இகாத்புரிக்கு அந்த ரயில் சென்றபோது, அதில் 4 போ் ஏறியுள்ளனா்.
மலைப்பகுதி வழியாக சென்றபோது அந்த ரயிலில் இருந்த 20 வயது இளம்பெண்ணை அவா்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனா். கசாரா பகுதியை ரயில் சென்றடைந்தபோது அதுகுறித்து சக பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாரும் குற்றப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட நால்வரும் ரயில் பயணிகளிடம் இருந்து ரூ.96,390 மதிப்பிலான பொருள்களை, பெரும்பாலும் செல்லிடப்பேசிகளைக் கொள்ளையடித்துள்ளனா். அவற்றில் ரூ.34,200 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நால்வா் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 395 (கொள்ளை), 376டி (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...