பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இந்தியாவில் இன்று மேலும் 18,132 பேருக்கு கரோனா; 193 பேர் பலி

இந்தியாவில் இன்று மேலும் 18,132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :11 அக்டோபர் 2021, 4:10 am

DIN

இந்தியாவில் இன்று மேலும் 18,132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.39 கோடியாக உயர்ந்துள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 193 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,50,782 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 21,563 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,32,93,478 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,27,347 ஆக உள்ளது.  இதுவரை 95,19,84,373 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 10,35,797 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

இதுவரை மொத்தம் 58,36,31,490 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் கேரளத்தில் 10,691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.